Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாரிகளில் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

லாரிகளில் கடத்தப்பட்ட  71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

லாரிகளை ஓட்டி வந்த இருவரையும் போலீஸார் கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகள், 71 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

காட்பாடி அருகே 2 லாரிகளில் கடத்தி வந்த 71 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் சரக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு டிஎஸ்பி வின்சென்ட் தலைமையிலான போலீஸார், மேல்பாடி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தியபோது, லாரிகளில் 71 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த இருவரையும் போலீஸார் கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், 71 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரேஷன் அரிசியை சென்னை துறைமுகத்துக்கு கொண்டுசென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
மின் கொள்முதலில் முழு வெளிப்படைத்தன்மை: அமைச்சர் திட்டவட்டம்
அடுத்த செய்தி
காலி பாட்டில் வசூல் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி: டாஸ்மாக் சீர்திருத்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு

தொடர்புடைய செய்திகள்